Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை விண்ணப்பத்தில் மொழி தொடர்பான பாகுபாடு குறித்த புகார்கள் குறைந்துள்ளன: TAFEP

வேலை விண்ணப்பங்களில், மொழி தொடர்பான பாகுபாடு குறித்த புகார்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வேலை விண்ணப்பத்தில் மொழி தொடர்பான பாகுபாடு குறித்த புகார்கள் குறைந்துள்ளன: TAFEP

(படம்: Unsplash/rawpixel)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வேலை விண்ணப்பங்களில், மொழி தொடர்பான பாகுபாடு குறித்த புகார்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAFEP எனும், நியாயமான வேலை நடைமுறைக்கான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பு அதனைத் தெரிவித்தது.

ஆனால், கொள்கை ஆய்வுக் கழகமும் OnePeople.sg அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தாய்வின் முடிவு அதற்கு மாறாகக் காட்டுகிறது.

வேலைக்கான விண்ணப்பங்களில், மொழி தொடர்பான பாகுபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டதாகக் கருத்தாய்வில் குறிப்பிட்ட மலாய்க்காரர்கள், இந்தியர்கள் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டுமுதல் அதிகரித்தது.

மலாய்க்காரர்களில் 73 விழுக்காட்டினரும், இந்தியர்களில் 68 விழுக்காட்டினரும், மற்ற இனத்தவர் பிரிவில், யூரேஷியர்களில் கிட்டத்தட்ட பாதி பேரும் வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது, மொழி தொடர்பான பாகுபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறினர்.

சீனர்களில் 38 விழுக்காட்டினரும் அவ்வாறு குறிப்பிட்டனர்.

ஒருவரை வேலையில் சேர்க்கும்போது, மொழி, முக்கியமான ஓர் அம்சம் என கருத்தாய்வில் பங்கேற்ற சீனர்களில் 80 விழுக்காட்டினர் கருதுவதாக ஆய்வின் முடிவு காட்டியது.

அந்த விகிதம் மலாய்க்காரர்கள், இந்தியர்களிடையே குறைவாகவே இருந்தது.

ஒருவரை வேலையில் சேர்க்கும்போது மொழி, முக்கியமான ஓர் அம்சம் என மலாய்க்காரர்களில் 71 விழுக்காட்டினரும்,
இந்தியர்களில் 73 விழுக்காட்டினரும் கருதுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்