Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லாவோஸ் அணை இடிந்ததில் மாண்டோரின் சடலங்களை மீட்க சிங்கப்பூர்க் காவல்துறையின் நாய்கள் உதவும்

காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது. 

வாசிப்புநேரம் -
லாவோஸ் அணை இடிந்ததில் மாண்டோரின் சடலங்களை மீட்க சிங்கப்பூர்க் காவல்துறையின் நாய்கள் உதவும்

(படம்:SPF, SCDF)

லாவோஸில் அணை இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்டோரின் சடலங்களை மீட்க உதவுவதற்கு மூன்று சிங்கப்பூர்க் காவல்துறை மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டுள்ளன.

காவல்துறையின் K9 நாய்கள் வெளிநாட்டு மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவது இது முதல் முறை என்று சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது. 

மூன்று நாய்களுடன் 14 காவல்துறை அதிகாரிகளும் 18 குடிமைத் தற்காப்புப் படை வீரர்களும் இன்று (ஆகஸ்ட் 13) காலை பயா லேபார் விமான நிலையத்திலிருந்து லாவோஸுக்குப் புறப்பட்டனர்.

விபத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 31. இன்னும் 130 பேரைக் காணவில்லை.

பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் உதவுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்