Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க அமைப்புகளின் செயல்பாடுகளில் குறைபாடுகள்: தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம்

அரசாங்க அமைப்புகளின் செயல்பாடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைத், தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் சுட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
அரசாங்க அமைப்புகளின் செயல்பாடுகளில் குறைபாடுகள்: தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம்

(படம்: Wikimedia Commons)

அரசாங்க அமைப்புகளின் செயல்பாடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைத், தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் சுட்டியுள்ளது.

செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும், பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், வசதிகளின் நிர்வாக ஒப்பந்தங்களை நிர்வகிப்பதிலும் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

கடந்த நிதியாண்டு அறிக்கையில், 16 அரசாங்க அமைப்புகள், 11 ஆணைபெற்ற அமைப்புகள் ஆகியவற்றில் தணிக்கைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொதுச் சேவைப் பிரிவு, சுகாதார மேம்பாட்டு வாரியம், மக்கள் கழகம், சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் குறைபாடுகள் குறிப்பிடப்பட்டன.

கல்வி அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றின் 'வசதி நிர்வாக ஒப்பந்தங்களில்' மேம்பாடுகள் தேவைப்படுவதாகத் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்