Images
  • nsf2
    (படம்:Aqil Haziq Mahmud)

மாண்ட முழுநேர தேசிய சேவையாளரின் தந்தை: மகனுடனான இறுதி உரையாடல்...

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் கொக் யுவன் சின் அவரின் தந்தையோடு இறுதியாகப் பேசியது கடந்த மாதம்...

இரவு உணவைப் பற்றி மகன் தம்மிடம் பேசியதாக 56 வயது கொக் மெங் ஹுவா சொன்னார்...

யுவன் சின் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் நீரேற்றக் கிணற்றில் மூழ்கி மாண்டார்.

அவரின் இறுதிச் சடங்கு மலாக்காவில் நடந்தது.


சேனல் நியூஸ் ஏஷியாவிடம் பேசிய திரு கொக் மெங் ஹுவா
தாம் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை செய்வதாகச் சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவருக்கு விடுப்பு.

கடந்த மாதம் ஒரு நாள் அவருக்கு வேலை சீக்கிரம் முடிந்ததால் தம் மகனைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டுள்ளார்.
மகனுக்கும் அன்றைய தினம் விடுப்பாக இருந்ததைத் திரு கொக் நினைவுகூர்ந்தார்.

ஒன்றாகச் சாப்பிட தமது மகனை அழைத்ததாகச் சொன்னார் திரு கோக்.
எனினும் மகன் வெளியே செல்லவிருந்ததால் இருவரும் சந்திக்கவில்லை...

விரைவில் தம் மகன் தேசிய சேவையை நிறைவேற்றவிருந்ததால் பின்னர் ஒரு தேதி நிதானமாகச் சந்தித்துப் பேசலாம் என ஆசைப்பட்டிருக்கிறார் அந்த அப்பா...

மகனின் மரணச் செய்தி மட்டுமே அப்பாவுக்கு மிஞ்சியது...
அந்தக் குடும்பத்துக்குப் பதில்கள் தேவை என யுவன் சினின் அத்தை கோரிக்கை விடுத்திருக்கிறார்.


யுவன் சின் கிணற்றிலிருந்து மேலே வரவில்லை என்று அறிந்ததும் யாராவது உள்ளே குதித்தார்களா?

அவரைக் காப்பாற்ற என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தங்களுக்குத் தெரியவேண்டும் என்றனர் அந்தக் குடும்பத்தினர்.

சம்பவத்தன்று கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாதத்துக்கு இரு முறை வீடு திரும்பிய யுவன் சின் வீட்டில் அதிகமான உதவிகளைச் செய்வாராம்...

உணவு உண்ட பின்னர் தட்டுகளைக் கழுவுவது, மேசையைத் துடைப்பது போன்ற வேலைகளைச் செய்யத் தயங்கியதே இல்லை என்றார் அவரின் தாயார்.

துணை போலிஸ் படையில் பணிபுரிய வேண்டும் என்பது யுவன் சினின் இலக்காக இருந்தது என்று அவர் சொன்னது நினைவிலேயே நிற்பதாக அம்மா கூறினார்...

 

உங்கள் கருத்து

Top