Images
  • sg covid
    (படம்: AFP/Roslan Rahman)

வீட்டிலிருந்தே வேலைசெய்யும் நடைமுறையைப் புதிய வழக்கமாக முதலாளிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : அமைச்சர் வோங்

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்திலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்பட்டாலும், வீட்டிலிருந்தே வேலைசெய்யும் நடைமுறையைப் புதிய வழக்கமாக முதலாளிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்(Lawrence Wong) கூறியிருக்கிறார்.

ஜூன் முதல் தேதிக்குப் பிறகு 3 கட்டங்களாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

இருப்பினும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறையைக் கூடியவரை அதிகக் காலத்திற்குக் கடைப்பிடிக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டரீதியான தேவை ஏற்பட்டாலோ, வீட்டிலிருந்தே சில கருவிகளை இயக்கமுடியாது என்ற சூழல் ஏற்பட்டாலோ, ஊழியர்கள் வேலையிடத்துக்குச் செல்லலாம்.

அவ்வாறு செல்வோருக்கு காற்றோட்டமான வேலையிடம், உயரிய சுகாதாரத் தரம் ஆகியவற்றை முதலாளிகள் உறுதிசெய்வது கட்டாயம் என்று அமைச்சர் வோங் கூறினார்.


 

Top