Images
  • wong

'COVID-19 போராட்டத்தில் உதவுவோருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் போதாது' -உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்திய அமைச்சர் லாரன்ஸ் வோங்

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் அமைச்சரவைக் குழுவிற்குக் கூட்டாகத் தலைமை வகிக்கிறார் அமைச்சர் வோங்.
 கிருமித்தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றிய அமைச்சர்நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டார்.

எல்லைக் கட்டுப்பாடுகள், சமூக அளவில் கிருமித்தொற்று பரவுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான நெடுநாள் போராட்டத்தில் சிங்கப்பூர் தொடக்கக் கட்டத்தில் உள்ளது என்றும் நிலைமை மோசமடைந்தால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

சிங்கப்பூரர்கள் ஒன்றினைந்து செயல்பட்டால் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Top