Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கூடுதல் நடவடிக்கைகள் அவசியமா என்று பரிசீலனை

சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கூடுதல் நடவடிக்கைகள் அவசியமா என்று பரிசீலனை

வாசிப்புநேரம் -
சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கூடுதல் நடவடிக்கைகள் அவசியமா என்று பரிசீலனை

(கோப்புப் படம்: Gaya Chandramohan/ CNA)

நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யக் கூடுதல் நடவடிக்கைகள் அவசியமா என்பதைப் பரிசீலித்துவருவதாகக் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைச் சுட்டிய அவர், அதிகாரிகள்
கிருமித்தொற்று நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் காவல்துறையின் துணைக் கால்நடை மருத்துவருடன் தொடர்புடைய ஐவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதை அவர் சுட்டினார்.

இருப்பினும், கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் சிலர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளவில்லை எனத் திரு வோங் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டார்.

அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவை வழிநடத்தும் அவர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூரில் கிருமி இன்னும் தொடர்ந்து பரவுவதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு திரு வோங் கேட்டுக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்