Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$33 மில்லியன் கடன் வழங்குமாறு தகவல் கொடுத்துவிட்டு தலைமறைவான சட்ட ஆலோசகர்

சிங்கப்பூரின் Allied Technologies நிறுவனம், 33 மில்லியன் வெள்ளி கடன் வழங்குமாறு தகவல் தந்துவிட்டுத் தலைமறைவான அதன் சட்ட ஆலோசகர் குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கப்போவதாகக் கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் Allied Technologies நிறுவனம், 33 மில்லியன் வெள்ளி கடன் வழங்குமாறு தகவல் தந்துவிட்டுத் தலைமறைவான அதன் சட்ட ஆலோசகர் குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கப்போவதாகக் கூறியிருக்கிறது.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையிடம் நிறுவனம் அவ்வாறு கூறியது.

சட்ட ஆலோசகர் ஜெஃப்ரே ஓங் (Jeffrey Ong), நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அவரது தகவல் அதிகாரபூர்வமற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், கடன்தொகைக்குப் பொறுப்பு வகிக்கும் JLC Advisors நிறுவனம், Allied Technologiesற்கு அதுகுறித்துத் தெரிவித்தது.

நிறுவனம் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது.

அந்த விவகாரத்தில் தீர்வுகாணப்படும்வரை, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பதிந்துகொண்டிருக்கும் எந்தவொரு நிறுவனத்திலும் ஓங் இயக்குநராகப் பதவி வகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்