Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

33 மில்லியன் வெள்ளி தொடர்பான மோசடியில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் மீது கையெழுத்து மோசடிக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில், 33 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணம் தொடர்பான மோசடியுடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் வழக்குரைஞர் ஜெஃப்ரி ஓங் (Jeffrey Ong) மீது கையெழுத்து மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
33 மில்லியன் வெள்ளி தொடர்பான மோசடியில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் மீது கையெழுத்து மோசடிக் குற்றச்சாட்டு

(படம்: JLC Advisors' website)

சிங்கப்பூரில், 33 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணம் தொடர்பான மோசடியுடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் வழக்குரைஞர் ஜெஃப்ரி ஓங் (Jeffrey Ong) மீது கையெழுத்து மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

41 வயது ஜெஃப்ரி ஓங் சு ஆன் (Jeffrey Ong Su Aun) இப்போது புதிதாக 8 கையெழுத்து மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

இம்மாதத் தொடக்கத்தில் 6 மில்லியன் வெள்ளியை மோசடி செய்ததன் தொடர்பில், அவர் மீது ஏற்கனவே ஏமாற்றுக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.

இதற்கிடையே மேலும் அதிகமான நிறுவனங்கள் 16 மில்லியன் வெள்ளி மோசடியின் தொடர்பில் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன.

Ong-கை மேலும் ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவலில் வைக்க, அரசுத்தரப்பு விண்ணப்பித்தது. நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த விசாரணை இம்மாதம் 20-ஆம் தேதி நடைபெறுமென அறிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்