Images
  • pritam

அரசாங்கத்தின் செயல்பாடுகளைச் சரிபார்க்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை: எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தாம் சிங்

எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தாம் சிங் (Pritam Singh), அரசாங்கத்தின் செயல்பாடுகளைச் சரிபார்க்கக் கூடுதல் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வேலைகள், வெளிநாட்டினருக்கான வேலை நியமனங்கள் போன்றவற்றின் தொடர்பில், நிரந்தர நாடாளுமன்ற நிலைத் தெரிவுக் குழு ஒன்றை அமைப்பதற்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

வேலையின்மை, வேலை தொடர்பான தகவல்களைக் கண்காணித்து, பொறுப்பான வகையில் விவரங்களை வெளியிடுவதில் அந்தக் குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.

வெளிப்படையான விதத்தில் செயல்பட்டு, வெளிநாட்டினருக்கான வேலைகள் பற்றி பொதுமக்களுக்கு மேலும் கூடுதலான தகவல்களை வழங்குமாறும் திரு. பிரித்தாம் சிங் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

வேலை தேடும் சிங்கப்பூரர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்றார் அவர்.

நமது கல்விமுறையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி முறைகளும் வேலைகளைப் பெறுவதற்கு உகந்தவையாக இருப்பதையும் அது உறுதிசெய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Top