Images
  • ngee ann poly gen view
    (படம்:Ngee Ann Polytechnic இணையத்தளம்)

இஸ்லாம் தொடர்பான 'இழிவான' கருத்துகளை வகுப்பில் பகிர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் விரிவுரையாளர் பணிநீக்கம் செய்யப்படலாம்

இஸ்லாம் தொடர்பான இழிவான கருத்துகளை வகுப்பில் பகிர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி விரிவுரையாளர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று, இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் (Maliki Osman) தெரிவித்துள்ளார்.

அண்மையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், இனவாதக் கருத்துகளை வெளியிட்ட அதே விரிவுரையாளர்தான் அவர் என்பதை, டாக்டர் மாலிக்கி தமது Facebook பதிவில் சுட்டினார்.

2017ஆம் ஆண்டில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற மாணவி, வகுப்புநேரத்தில், இஸ்லாம் தொடர்பான தனிப்பட்ட, இழிவான கருத்துகளை, விரிவுரையாளர் பகிர்ந்ததாகக் குறைகூறியிருந்தார்.

கல்வி அமைச்சும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும், சம்பவத்தைக் கடுமையான ஒன்றாய்க் கருதுவதாக டாக்டர் மாலிக்கி குறிப்பிட்டார்.

கல்வி நிலையங்களில், இனம், மதம் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கக் கல்வியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் கூறினார்.

அந்த விரிவுரையாளர், கலப்பினக் காதல் இணையைப் பார்த்து, இனவாதக் கருத்துகளை கூறும் காணொளி அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று அவர் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.  

Top