Images
  • state courts
    கோப்புப் படம்: TODAY

கடைத்தொகுதிகளில் பெண்களை ஆபாசக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்ட முன்னாள் விரிவுரையாளர்

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஒருவர், கடைத்தொகுதிகளில் பெண்களை ஆபாசக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சியா டெக் ஹுவாட் (Chia Teck Huat) எனும் 41 வயது ஆடவர், 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் ஒரு குற்றச்சாட்டு, தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்படும்.

2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், சியா, Plaza Singapura, ION Orchard, Tampines Mall உள்ளிட்ட கடைத்தொகுதிகளில் ஆபாசக் காணொளிகளை எடுத்தார்.

அவர் தமது மடிக்கணினிப் பையில் சில சிறிய அளவுள்ள கேமராக்களை மறைத்துவைத்திருந்ததாகவும், குட்டைப் பாவடை அணிந்திருந்த பெண்களைப் காணொளி எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

Plaza Singapura கடைத்தொகுதியில், அக்டோபர் 23-ஆம் தேதி அன்று, அவர் அச்செயலில் ஈடுபட்டிருந்ததைக் கவனித்த ஓர் ஆடவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

சியா அன்றே கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 362 காணொளிகள் மீட்கப்பட்டன.

சியா மீண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி அன்று நீதிமன்றம் திரும்புவார்.

பெண்களின் தன்மானத்திற்கு இழிவு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்கு அதிகபட்சமாக ஓராண்டுச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

Top