Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீ சூன் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

நீ சூன் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா (Lee Bee Wah) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
நீ சூன் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

(படம்: Facebook/Lee Bee Wah)

நீ சூன் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா (Lee Bee Wah) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தத் தவணைக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தமது Facebook பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.

கட்சியைப் புதுப்பிக்கும் நடைமுறையின் ஒருபகுதியாக, இளம் உத்தேச வேட்பாளர் போட்டியிடவிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார் 59-வயது டாக்டர் லீ.

மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அவர். கடந்த 14 ஆண்டுகள் மக்களுக்குச் சேவையாற்றியது பெருமைக்குரிய ஒன்று எனக் கூறினார் அவர்.

2006 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினராக இருந்த அவர் 2011, 2015 பொதுத்தேர்தல்களில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.

புதிய உத்தேச வேட்பாளர் கேர்ரி டான் (Carrie Tan), டாக்டர் லீயின் இடத்தில் போட்டியிடுவார்.

மற்றொரு புதிய உத்தேச வேட்பாளர் யிப் ஹோன் வெங்கும் (Yip Hon Weng) நீ சூனில் தொகுதி உலா சென்றுள்ளார்.

நீ சூன் குழுத்தொகுதியின் மற்றொரு முன்னாள் உறுப்பினர் ஹென்ரி குவெக் (Henry Kwek) புதிய கெபுன் பாரு தனித்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்