Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விளையாட்டு அரங்கில் விளக்குகளை அணைக்கக் கூறிய குற்றச்சாட்டை மறுத்த லீ பீ வா

நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா (Lee Bee Wah), யீஷூன் விளையாட்டு அரங்கில் விளக்குகளை அணைக்கக் கூறியதால், அங்கு நடந்த காற்பந்தாட்டம் ஒன்று பாதிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா (Lee Bee Wah), யீஷூன் விளையாட்டு அரங்கில் விளக்குகளை அணைக்கக் கூறியதால், அங்கு நடந்த காற்பந்தாட்டம் ஒன்று பாதிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

The Online Citizen வெளியிட்ட அறிக்கையில் அந்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றன.

விளையாட்டு அரங்கத்தில் விளக்குகள் வழக்கமாக இரவு 9 மணிக்கு அணைக்கப்படும் என, அரங்கத்தை நிர்வகிக்கும் Active SG அமைப்பு விளக்கமளித்தது.

இருப்பினும், கடந்த வாரம் நடைபெற்ற காற்பந்தாட்டம் ஒன்று, அதற்குள் முடிவடையவில்லை என்று அது குறிப்பிட்டது.

Warriors காற்பந்து அணிக்கும், சிங்கப்பூர் காற்பந்து சம்மேளனத்தின் அணி ஒன்றுக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.

அப்போது அரங்கிற்கு வெளிச்சமளித்த இரண்டு பெரிய விளக்குகள் அணைக்கப்பட்டன.

விளக்குகள் 9 மணிக்கு அணைக்கப்படும் என்பது பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததாக Warriors காற்பந்து அணியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இருப்பினும் ஆட்டம் முடியும் வரை விளக்குகளைக் கொண்டிருக்க, நீக்குப்போக்கை ஊழியர்கள் கடைப்பிடித்திருக்கலாம் எனக் கூறி, Active SG அமைப்பு பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்