Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்ட உதவிகளைப் பெறுவதற்கான செயல்முறை சுருங்கவிருக்கிறது

சட்ட உதவிப் பிரிவை நாடுவோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்க புதிய முறை ஒன்று அறிமுகம் காணவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சட்ட உதவிகளைப் பெறுவதற்கான செயல்முறை சுருங்கவிருக்கிறது

கோப்புப் படம்:Singapore's Ministry of Law

சட்ட உதவிப் பிரிவை நாடுவோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்க புதிய முறை ஒன்று அறிமுகம் காணவிருக்கிறது.

சட்ட உதவிகளைப் பெறுவதற்கான செயல்முறையைச் சுருக்குவது அதன் நோக்கம்.

வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய முறை நடப்புக்கு வரும்.

புதிய திட்டத்தின்கீழ் உதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் மாத வருமானம் 950 வெள்ளிக்கும் குறைவாக இருக்கவேண்டும்.

13,000 வெள்ளிக்கும் குறைவான மதிப்புள்ள ஒரு சொத்தை மட்டுமே அவர்கள் வைத்துக்கொள்ள முடியும்.

மத்திய சேம நிதி அல்லாத சேமிப்புகள், முதலீடுகள் 10,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்கவேண்டும்.

புதிய திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்வோர் வீட்டு வருமானம், சொந்த சேமிப்பு, முதலீடு குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டும் போதும்.

தற்போது, வாழ்க்கைத் துணையின் வருமானச் சான்றிதழ், வாடகைச் சான்றிதழ், காப்புறுதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

புதிய திட்டத்தின்கீழ் உதவிக்குத் தகுதி பெறாதவர்கள் கவலையடையத் தேவையில்லை.

அத்தகையோரின் தேவைகளைக் கண்டறிய, சட்ட அமைச்சு புதிய சுயேச்சைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

சட்டச் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான உதவிகள் ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்து வழங்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்