Images
  • supreme court
    (படம்: CNA)

வளர்ப்பு மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த கடுமையான பார்வைக் குறைபாடுள்ள ஆடவருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கடுமையான பார்வைக் குறைபாடுள்ள (legally blind) ஆடவர் ஒருவருக்கு, தமது 8 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, 15 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த 42 வயது ஆடவர் அந்தச் சிறுமியை ஒன்றரை ஆண்டுக் காலம் துன்புறுத்தி வந்துள்ளார்.

ஆடவரின் மனைவி கருவுற்று இருந்தபோது, வளர்ப்பு மகள் மீதான துன்புறுத்தல் இன்னும் அதிகமானது.

ஆடவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பார்வைக் குறைபாடுள்ள ஆடவர் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்.


Top