Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HIV தகவல் கசிவுச் சம்பவத்துக்குத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் தற்காலிக பணி நிறுத்தம்

சிங்கப்பூரில் HIV தகவல் கசிவுச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மருத்துவர் லர் தெக் சியாங் (Ler Teck Siang) மேலும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -
HIV தகவல் கசிவுச் சம்பவத்துக்குத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் தற்காலிக பணி நிறுத்தம்

(படம்: Gaya Chandramohan/ CNA)

சிங்கப்பூரில் HIV தகவல் கசிவுச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மருத்துவர் லர் தெக் சியாங் (Ler Teck Siang) மேலும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும்.

அவருடைய மருத்துவச் சேவைப் பதிவு ஒன்பது மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடந்த HIV தகவல் கசிவுச் சம்பவத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் மிக்கி புரோஷேக்காக, லர் தம்முடைய இரத்த மாதிரியைச் சோதனைக்குக் கொடுத்து உதவியுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களையும் வழங்கியுள்ளார். அந்த இரு காரணங்களுக்காக மருத்துவர் லர் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இம்மாதம் 7ஆம் தேதி இடைக்கால உத்தரவு மன்றம் மருத்துவர் லரைத் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

தமக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து மருத்துவர் லர் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் அறிக்கை வெளிவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்