Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது... மக்கள் என்ன நினைக்கின்றனர்?

அலுவலகங்கள், பள்ளிகள் தவிர வேறெங்கும் ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நெறிமுறை நேற்று புதிதாய் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது... மக்கள் என்ன நினைக்கின்றனர்?

படம்: Gaya Chandramohan

அலுவலகங்கள், பள்ளிகள் தவிர வேறெங்கும் ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நெறிமுறை நேற்று புதிதாய் அறிவிக்கப்பட்டது.

மக்கள் அது குறித்து என்ன கூறுகின்றனர்?

அறிந்துவந்தது 'செய்தி'.

பெரும்பாலான மக்கள் அதை வரவேற்கின்றனர்.

COVID-19 கிருமி வேகமாகப் பரவிவரும் வேளையில், இது போன்ற நெறிமுறை மிகவும் உதவும். 

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாலும், மக்கள் அவற்றைப் பின்பற்றமாட்டார்கள் என்று சிலர் கூறினர்.

இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு வருவோரைக் கட்டங்கட்டமாகப் பிரிப்பது சாத்தியம் அல்ல. கூட்டம் கூடுவது தவிர்க்க முடியாத ஒன்று.

சிலர் புதிய நெறிமுறைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஒரு நேரத்தில் 10 பேர் மட்டுமே கூடுவதை உறுதிசெய்யமுடியாது. அதுநடைமுறைப்படுத்தக்கூடிய செயல் இல்லை.

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அறிவித்திருந்தது.

அதுபற்றிய மேல் விவரங்கள்.... இன்றிரவு செய்தியில்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்