Images
  • Malaysia Police Arrest
    (படம்:  CNA)

ஆபாசப் படங்களை Instagram-இல் பதிவேற்றிய சந்தேகத்தின்பேரில் ஆடவர் கைது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Instagram தளத்தில் ஆபாசப் படங்களைப் பதிவேற்றிய சந்தேகத்தின்பேரில் 34 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் மூன்று பதிவுகள் குறித்துப் பல்வேறு புகார்கள் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுவா சு காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் பொதுத் தாழ்வாரத்தில் அந்நபர் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடும் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

விசாரணையில் ஆடவரின் அடையாளத்தை ஜூரோங் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அவரின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்ததாக அவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.  

Top