Images
  • pink dot
    (படம்:  TODAY)

"சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதில்லை" - ஓங் யீ காங்

சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
நேற்று ( 14 செப்டம்பர்) சிங்கப்பூர் உச்சநிலை கூட்டத்தில் இடம்பெற்ற கேள்வி அங்கத்தின் போது அவர் அவ்வாறு கூறினார்.

ஓரினச் சேர்க்கை சமூகத்தினர் சிங்கப்பூரில் வீடமைப்பு, வேலை, கல்வி போன்றவற்றில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்நோக்காமல் வாழலாம் என்று திரு. ஓங் கூறினார். அனைவரையும் உள்ளடக்குவது சிங்கப்பூரின் இயல்பு என்றார் அவர்.

இந்தியாவில் ஓரினச் சேர்க்கையினத்தாருக்கிடையிலான பாலியல் உறவைத் தடைசெய்யும் சட்டம் நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து 377A சட்டத்தை நீக்குமாறு சிங்கப்பூரில் உள்ள ஓரினச் சேர்க்கை சமூகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய பிரமுகர்களும் அந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சட்டத்தை அகற்றவும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் இணையத்தில் இரு சாராரும் மனுக்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூரர்கள் ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் இரு வகைப்படுகின்றனர் என்றும் எந்த முடிவை நோக்கி செல்வது என்பது சமுதாயத்தின் முடிவு என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தின் கருத்துகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் திரு ஓங்கின் பதில் அமைந்திருந்தது.
 

Top