Images
  • LHL MBS
    (படம்: Lee Hsien Loong/ Instagram)

F1 இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் பங்குபெறும் குழுக்களுக்குப் பிரதமர் லீயின் வாழ்த்து


இன்றிரவு நடைபெறவிருக்கும் F1 சிங்கப்பூர் இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் பங்குபெறவுள்ள அனைத்துக் குழுக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ சியென் லூங்.

தமது வாழ்த்தை அவர், மரினா பே சேண்ட்ஸைத் (Marina Bay Sands) தாம் எடுத்த நிழற்படம் ஒன்றுடன் Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பந்தயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் உள்ளதாகப் படத்தின் கீழ் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம் சன்டெக், சிட்டி ஹால், மரினா பே (Suntec, City Hall, Marina Bay) வட்டாரங்களில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதனால் கவனம் தேவை என்பதையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்துக் காவலர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறும் திரு. லீ கேட்டுக்கொண்டார்.  

Top