Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-மெக்சிகோ இருதரப்பு வர்த்தகத்துக்கு அரசாங்கங்கள் ஆதரவு: பிரதமர் லீ

சிங்கப்பூர், மெக்சிகோ அரசாங்கங்கள், ஒன்று மற்றதன் நாட்டில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-மெக்சிகோ இருதரப்பு வர்த்தகத்துக்கு அரசாங்கங்கள் ஆதரவு: பிரதமர் லீ

(படம்: Elizabeth Neo/ CNA)

சிங்கப்பூர், மெக்சிகோ அரசாங்கங்கள், ஒன்று மற்றதன் நாட்டில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

விரிவான பசிபிக் பங்காளித்துவ முற்போக்கு உடன்பாட்டில் இரு நாடுகளின் பங்கேற்பும் அதனைப் பிரதிபலிக்கிறது.

மெக்சிகோ செனட் சபையில் ஆற்றிய உரையில், பிரதமர் லீ சியென் லூங் அதுபற்றிப் பேசினார்.

பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடந்த பல நாடுகளில் கணிசமாய் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அமெரிக்க வட்டாரத்தில் அமெரிக்காவுடன் சிங்கப்பூர் ஆகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது.

மெக்சிகோ, வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளுடனும் அது கணிசமான அளவு வர்த்தகம் செய்து வருகிறது.

ஆசிய வட்டாரத்தில் சீனாவே மெக்சிகோவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழ்கிறது.

மற்ற ஆசிய நாடுகளும் மெக்சிகோவுக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்