Images
  • LHL Rally
    (படம்:  Xabryna Kek/ CNA)

தேசிய தினக் கூட்ட உரை: பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான முயற்சிகளைப் பற்றி பேசவிருக்கும் பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றித் தமது தேசிய தினக் கூட்ட உரையில் பேசவிருக்கிறார்.

மோசமான சூழலில், சிங்கப்பூரின் வெப்ப நிலை கடுமையாக உயரக்கூடுமென, BBC வெளியிட்ட இருவழி இணைய அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இப்போது, 27.8 டிகிரி செல்சியஸாக இருக்கும் ஜூலை மாத வெப்பநிலை, 2,100-ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 31 டிகிரி செல்சியஸை எட்டும் நிலை-கூட ஏற்படலாம் என்பதை அவர் சுட்டினார்.

பருவநிலை மாற்றத்துக்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் தாழ்வான ஒரு தீவு என்பதால், உயர்ந்துவரும் கடல்நீர் மட்டம் காரணமாக, அது பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

அதனைக் கையாள எத்தகைய முயற்சிகள் தேவை என்பது பற்றி தமது தேசிய தினக் கூட்ட உரையில் பேசவிருப்பதாகப் பிரதமர் லீ கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்குப் பிரதமரின் தேசிய தினக் கூட்ட உரை இடம்பெறும். 

Top