Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன நல்லிணக்கத்தால் ஏற்பட்டுள்ள அமைதியை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்க தொடர்ந்து உழைக்க வேண்டும்: பிரதமர் லீ

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தினால் ஏற்பட்டுள்ள அமைதியை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்க, சிங்கப்பூரர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதைப் பிரதமர் லீ சியென் லூங் நினைவூட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இன நல்லிணக்கத்தால் ஏற்பட்டுள்ள அமைதியை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்க தொடர்ந்து உழைக்க வேண்டும்: பிரதமர் லீ

(படம்: leehsienloong/ Instagram)

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தினால் ஏற்பட்டுள்ள அமைதியை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்க, சிங்கப்பூரர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதைப் பிரதமர் லீ சியென் லூங் நினைவூட்டியுள்ளார்.

இன நல்லிணக்க நாளாகிய இன்று, Instagram, Facebook ஆகிய சமூக ஊடகங்களில் அக்கருத்தைத் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ.

பதிவுகளின் வழி அனைவருக்கும் இன நல்லிணக்க நாள் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.

இன நல்லிணக்க நாளை முன்னிட்டு பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றியும் திரு. லீ குறிப்பிட்டார்.

வெவ்வேறு இனத்தவர் தங்களுடைய வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு அதே வேளையில் ஒருவர் மற்றவரது கலாசாரத்தைக் கொண்டாடுவது சிங்கப்பூரின் தனித்துவம் என்று பிரதமர் பாராட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்