Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லீ சியென் யாங் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்தார்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் திரு. லீ சியென் யாங் (Lee Hsien Yang) சேர்ந்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் திரு. லீ சியென் யாங் (Lee Hsien Yang) சேர்ந்துள்ளார்.

அவர் பிரதமர் லீ சியென் லூங்கின் சகோதரர்.

திரு. லீ சியென் யாங்,சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்த தகவலைக் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக் (Tan Cheng Bock) இன்று காலை அறிவித்தார்.

டாக்டர் டானும் திரு லீ சியென் யாங்கும் இன்று காலை தியோங் பாரு சந்தையில் உணவு உண்ட பிறகு அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

திரு. லீ சியென் யாங், கொஞ்ச நாள்களுக்கு முன்பே கட்சியில் சேர்ந்துவிட்டதாக டாக்டர் டான் சொன்னார்.

கட்சியின் உறுப்பினர் தகுதியை அவருக்குக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் டாக்டர் டான் கூறினார்.

இருப்பினும் லீ சியென் யாங் பொதுத் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.

சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் ஜூன் 30. பொதுத் தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி இடம்பெறுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்