Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அன்றாட வாழ்கைச் செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப $900 வரை நிதியுதவியுடன் கூடுதல் சலுகைகள்

அன்றாட வாழ்கைச் செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப $900 வரை நிதியுதவியுடன் கூடுதல் சலுகைகள்

வாசிப்புநேரம் -
அன்றாட வாழ்கைச் செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப $900 வரை நிதியுதவியுடன் கூடுதல் சலுகைகள்

(கோப்புப் படம்: Alif Amsyar/ CNA)

பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் 300 லிருந்து 900 வெள்ளி வரை வழங்கு தொகை பெறவுள்ளனர்.

கடந்த மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த திட்டத்தில் 100 லிருந்து 300 வெள்ளி வரை வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த தொகை மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குக் கூடுதலாக உதவி வழங்கப்படும்.

குறைந்தபட்சம் ஓர் இளம் குழந்தை உள்ள சிங்கப்பூர்ப் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருந்த வழங்குதொகை 100 லிருந்து 300 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வேலைநலன் சிறப்பு வழங்கு தொகையில் வீட்டுத் தேவைகளுக்காக 3,000 வெள்ளி வழங்கப்படவுள்ளது.

வசதிகுறைந்த குடும்பங்களின் அன்றாடச் செலவுக்கு, குறிப்பாக உணவு, மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக 300 வெள்ளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

அடுத்த வருடமும் அவர்களுக்கு 100 வெள்ளி பற்றுச்சீட்டுகள் அளிக்கப்படும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களின், PAssion அட்டைக்கான ஒருமுறை நிரப்புத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

நெரிசல்மிக்க வரிசைகளைத் தவிர்ப்பதற்காக அத்தகைய ஏற்பாடு.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்