Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைவர், இயக்குநர் வாரிய உறுப்பினர்களின் நியமனங்கள் அறிவிப்பு

சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட இயக்குநர் வாரிய உறுப்பினர்களின் நியமனங்களை, சுற்றுப்புற நீர்வள அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைவர், இயக்குநர் வாரிய உறுப்பினர்களின் நியமனங்கள் அறிவிப்பு

(படம்: A*Star)


(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட இயக்குநர் வாரிய உறுப்பினர்களின் நியமனங்களை, சுற்றுப்புற நீர்வள அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் கீழ் இயங்கும் சிங்கப்பூர் உணவு அமைப்பு, அடுத்த மாதம் முதல் தேதி நிறுவப்படும். உணவுப் பாதுகாப்பு விவகாரங்களை அது மேற்பார்வையிடும்.

14 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர் வாரியத்தின் தலைவராக
A*Star நிறுவனத்தின் தலைவர் லிம் சுவான் போ (Lim Chuan Poh) நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் கொக் தாய் (Lim Kok Thai), புதிய சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்