Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியாவுக்கு நிவாரண நிதி - SICCI, LISHA வழங்கும் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபையும் (SICCI), LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இணைந்து இந்தியாவின் கிருமித்தொற்று நிவாரண நிதிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தியாவுக்கு நிவாரண நிதி - SICCI, LISHA வழங்கும் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை

(படம்: LISHA)

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபையும் (SICCI), LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இணைந்து இந்தியாவின் கிருமித்தொற்று நிவாரண நிதிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளன.

இந்தியாவின் COVID-19 நிலவரத்தைக் கையாள்வதற்கு உதவ, பல நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் தனிநபர்களும் நிவாரண நிதிக்குக் கைகொடுத்ததாக இரு அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து அந்த நிதித் திரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கட்டான இந்தக் காலக்கட்டத்திலும் நன்கொடை அளிக்கப் பல்வேறு தரப்பினர் முன்வந்தது மனநிறைவு அளித்துள்ளதாகக் கூறினார் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் T சந்துரு.

(படம்: LISHA)

(படம்: LISHA)

எண்ணியதைவிட அதிக நிதி திரட்டப்பட்டதாகவும் டாக்டர் சந்துரு கூறினார்.

500,000 வெள்ளி வந்தாலே பெரிய விஷயம் என்று நினைத்துத் திட்டமிட்டோம். ஆனால் எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளியை நாங்கள் திரட்டினோம்.

என்று அவர் தெரிவித்தார்.

(படம்: SICCI)

(படம்: SICCI)

இன்று பின்னேரத்தில் நடைபெறவிருக்கும் இணையச் சந்திப்பில், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு P. குமரனின் முன்னிலையில் ஒரு மில்லியன் வெள்ளி மதிப்புள்ள காசோலை வழங்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்