Images

புதுப்புதுக் கட்டடங்கள் - லிட்டில் இந்தியாவின் தோற்றம் மாறுகிறதா?

லிட்டில் இந்தியாவில் சுமார் 10 புதிய குடியிருப்பு, வர்த்தகச் சொத்துகள் கடந்த ஈராண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டிற்குள் இன்னும் 5 கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுரிமை வீடுகள், ஹோட்டல்கள், சிராங்கூன் பிளாஸா The Verge ஆகியவற்றின் மறுமேம்பாடு முதலானவை அவற்றில் அடங்கும்.

Hilton Garden Inn ஹோட்டல் நகர்ப் பகுதிக்கு அருகில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹோட்டல்களில் ஒன்று.


Park ஹோட்டல், One Farrer ஹோட்டல் போன்று அதன் அறைகளின் கட்டணம் போட்டித்தன்மைமிக்கதாக உள்ளது.

அங்கு ஓர் இரவு தங்க சுமார் 200 வெள்ளியாகும்.

நகரில் அதே தரநிலையைக் கொண்ட ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது இது மலிவு.

முன்னதாக The Verge ஆக இருந்த கட்டடம் கூடிய விரைவில் புதுப்பொலிவுடன் Tekka Place என்ற பெயருடன் திறக்கப்படவுள்ளது.

கூடுதல் வருகையாளர் எண்ணிக்கையால் அது பயனடையக்கூடும்.

லிட்டில் இந்தியாவிற்குக் கூடுதல் வருகையாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் அத்துடன் நின்றுவிடவில்லை.

முஸ்தஃபா பேரங்காடி நிலையத்தின் சிராங்கூன் பிளாஸா கிளை இடிக்கப்பட்டுள்ளது.

அதன் இடத்தில் Centrium Square கட்டடம் எழுப்பப்படும்.

மருத்துவ அறைகள், சில்லறை வர்த்தகக் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட 19 மாடிக் கட்டடம் அடுத்த ஆண்டு கட்டி முடிக்கப்படும்.

ஆனால் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புப் பணிகளால் அந்த பகுதியின் அடையாளம் பாதிக்கப்படுமோ என்பது நிபுணர்களின் அக்கறை.

தற்போது, நகர சீரமைப்பு ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளால் கடைவீடுகள் பாதுகாக்கப்படுவதாகவும்

அந்த வட்டாரத்தின் நம்பகத்தன்மை கட்டிக்காக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், அடுத்த ஆண்டின் பிற்பாதியில் கட்டிமுடிக்கப்படும் Tekka Place கலைகள் மீதும் கலாசாரம் மீதும் கூடுதல் கவனம் செலுத்தும்.

Top