Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

‘சிரமமாக இருந்தாலும் விதிமுறைகளில் உறுதியாக இருக்கிறோம்’- லிட்டில் இந்தியா உணவகங்கள்

சிங்கப்பூரில் முடக்கநிலை தளர்த்தப்படும் 2ஆம் கட்டத்தில் மக்கள் அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுக்களாக உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் முடக்கநிலை தளர்த்தப்படும் 2ஆம் கட்டத்தில் மக்கள் அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுக்களாக உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகக்கவசங்களை உண்ணும்போது மட்டும் அகற்றலாம்.

ஒவ்வொரு மேசைக்கும் இடையில் 1 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.

வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் கலக்கக் கூடாது-என்பன போன்ற விதிமுறைகள் நடப்பில் உள்ளன.

இருப்பினும், சமீப காலத்தில் பல உணவகங்களும் வாடிக்கையாளர்களும் அந்த விதிகளை மீறியதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

வார இறுதியில் அவ்வாறு விதிமுறைகளைப் பின்பற்றாத 23 உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள உணவகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்னென்ன? அங்கு வரும் வாடிக்கையாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? 

நேரடியாகச் சென்று விசாரித்தது 'செய்தி'....


திரு. முருகப்ப பாண்டியன், பிரசன்னா உணவக உரிமையாளர்:


திரு. முனியாண்டி, உணவக வாடிக்கையாளர்:

அனைவரும் சாப்பாடு வரும்வரை முகக்கவசம் அணிகின்றனர். ஆனால் சாப்பிட்டு முடித்தபின் பலரும் மறதியில் முகக்கவசம் அணிவதில்லை.


பெரும்பாலான உணவகங்கள் விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றுகின்றன. இருப்பினும் வாடிக்கையாளர்களில் பலரும் உணவு, பானங்கள் உட்கொள்ளும் முன்பும் பின்பும் முகக்கவசங்களைத் தேவையின்றி அகற்றுவது கவனிக்கப்பட்டது.


திரு. செந்தில்குமார், ஆனந்தபவன் உணவக மேலாளர்


திருமதி  சரஸ்வதி, சகுந்தலா உணவக உரிமையாளர்

திரு. சார்ல்ஸ், The Banana Leaf Apolo உணவக மேலாளர்


பொதுவாக, உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டால் அவர்கள் அதன்படி நடந்துகொள்கின்றனர்.

ஒரு சிலர் சினமடைவதும், வீண்வாதம் செய்வதும் உண்டு. ஒரு சில முறை உணவக ஊழியர்கள் எடுத்துக் கூறியும் அதைக் கேட்காதோர் உணவகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சில உணவகங்களில் வாடிக்கையாளர்கள் விதிகளைமீறி முகக்கவசத்தை அகற்றுவதைத் தவிர்க்க, அவர்கள் நுழைந்த உடனே தண்ணீர், தின்பண்டங்கள் போன்றவை வைக்கப்படுவதும் கவனிக்கப்பட்டது.

கிருமித்தொற்றைத் தடுக்கவே அரசாங்கம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. அவற்றை முழுமனத்துடனும் புரிந்துணர்வுடனும் பின்பற்றுவது மக்களின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்று. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்