Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடனைத் திரும்பக் கேட்டுத் தொந்தரவு செய்ததன் தொடர்பில் 27 வயது ஆடவர் கைது

காவல்துறை, கடனைத் திரும்பக் கேட்டுத் தொந்தரவு செய்த சந்தேகத்தில் 27 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

காவல்துறை, கடனைத் திரும்பக் கேட்டுத் தொந்தரவு செய்த சந்தேகத்தில் 27 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளது.

இம்மாதம் 23, 24ஆம் தேதிகளன்று கடன்முதலைத் தொல்லை தொடர்பிலான இரு புகார்கள் அளிக்கப்பட்டன.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 21, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 (Jurong West Street 41, Bukit Batok West Avenue 8) ஆகிய இடங்களிலுள்ள வீடுகளில் சாயம் தெளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதோடு, கடன் சம்பந்தப்பட்ட குறிப்புகளும் காணப்பட்டன.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடும், ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர் அதைப் போல வேறு சில சம்பவங்களில் ஈடுபட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5000 வெள்ளி அபராதமும் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்