Images
  • Scams Arrest
    (கோப்புப் படம்: CNA)

இரு வேறு கடன்முதலை அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 2 ஆடவர்கள் கைது

சிங்கப்பூரில், இரு வேறு கடன்முதலை அச்சுறுத்தல் சம்பவங்களின் தொடர்பில் 28 மற்றும் 31 வயது கொண்ட இரு ஆடவர்களைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

முதல் சம்பவத்தைப் பற்றி சென்ற மாதம் 27ஆம் தேதியன்று, இரவு 11 மணியளவில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

தெலுக் பிளாங்கா ஸ்ட்ரீட் 31இலுள்ள வீட்டின் வாயிற்கதவில் சாயம் தெளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதோடு, அந்த வீட்டின் வெளிச்சுவரில் கடன் சம்பந்தப்பட்ட குறிப்பும் எழுதப்பட்டது.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடும் கிளமெண்டி காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரை இன்று கைது செய்தனர்.

சந்தேக நபர் அதைப் போல வேறு சில சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இரண்டாம் சம்பவத்தைப் பற்றி சென்ற மாதம் 28ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. சுவா சு காங் அவென்யூ 7இல் பாதிக்கப்பட்டவருக்குக் கடன் சம்பந்தப்பட்ட குறிப்பும், அவரது வீட்டின் புகைப்படமும் அனுப்பப்பட்டன.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடும் ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரை நேற்று கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் இருவர் மீதும் நாளை (8 ஏப்ரல்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 முதல் 50,000 வெள்ளி வரையிலான அபராதமும் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.  

Top