Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தற்கொலை முயற்சியைத் தவிர்ப்பதை மையமாகக் கொண்ட உள்ளூர்ப் பாடல்

தற்கொலை முயற்சியைத் தவிர்ப்பதை மையமாகக் கொண்ட உள்ளூர்ப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 'கடிதம்' என்னும் தலைப்பு கொண்ட பாடலை Singisai Squad இசைக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தற்கொலை முயற்சியைத் தவிர்ப்பதை மையமாகக் கொண்ட உள்ளூர்ப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 'கடிதம்' என்னும் தலைப்பு கொண்ட பாடலை Singisai Squad இசைக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

தற்கொலை எண்ணத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது பாடலின் நோக்கம். காணொளிப் பாடலாக அது YouTube-இல் வலம் வருகிறது.

திரைப்பட நடிகர் சூர்யா அதனைத் தமது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதுவரை அது 8000க்கும் அதிகமாகப் பார்வையிடப்பட்டது.

முக்தி, மிச் யோகன் இருவரும் இணைந்து பாடல் வரிகளைப் புனைந்துள்ளனர். திருக்குமரா பாடலை இசையமைத்துள்ளார். Bonio Vescas இசையைத் தயாரித்துள்ளார். பாடல் காணொளியை JK சரவணா இயக்கியுள்ளார்.

பாடலுக்கான பணிகள் ஓராண்டிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

சிண்டா, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, வளர்தமிழ் இயக்கம்,  லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்,  Wish a Smile அறநிறுவனம் ஆகியவை பாடலுக்கு ஆதரவு நல்கியுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்