Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'அடிப்படைச் சம்பளத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்குப் போதிய அவகாசம் இருக்கும்'

Local Qualifying Salary எனும் சிங்கப்பூரர்களுக்கான அடிப்படைச் சம்பளத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்குப் போதுமான கால அவகாசம் இருக்கும் என்று மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் காணவிருக்கிறது.

புதிய திட்டம் - நிறுவனங்கள், சிங்கப்பூரர்களைப் பணியமர்த்த ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இருப்பினும், சில நிறுவனங்களின் செலவு உயரக்கூடும் என்று திரு. ஸாக்கி கூறினார்.

குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஆதரவாகப் பயனீட்டாளர்களும் பங்களிக்கவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் செயல்படும் செயல்படும் சுமார் 23 விழுக்காட்டு நிறுவனங்கள் வெளிநாட்டுத் திறனாளர்களைப் பணியமர்த்தவில்லை என்றும் திரு. ஸாக்கி கூறினார்.

உணவங்காடிக் கடைகள், குடியிருப்புப் பேட்டைகளில் செயல்படும் சில்லறை வர்த்தகம் போன்ற சிறிய அளவிலான குடும்ப வர்த்தகங்கள் அவற்றுள் அடங்கும்.

அத்தகைய வர்த்தகங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்றார் திரு. ஸாக்கி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்