Images
  • SIA flight
    (படம்: AFP/REMY GABALDA)

உலகின் நீண்டதூர விமானச் சேவைகள் யாவை?

தொழில்நுட்பத்தின் உதவியாலும், சிறந்த வடிவமைப்பாலும் விமானத்தில் கூடுதல் எரிபொருள் நிரப்பி, நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானச் சேவைகள் தற்போது அதிகமாகி வருகின்றன.

சிங்கப்பூரில் இருந்து நியூயார்க்கிற்கு உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானச் சேவை நேற்றுத் தொடங்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தற்போது நீண்டதூரச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நீண்டதூரச் சேவைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள மூன்று சேவைகள் சிங்கப்பூரில் இருந்து செயல்படுபவை.

சில நீண்டதூரச் சேவைகளின் பட்டியல் இதோ:

1. சிங்கப்பூர் - நியூயார்க், பயண தூரம்: 15,345. நிறுவனம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

2. டோஹா - ஆக்லந்து, பயண தூரம்:14,536. நிறுவனம்: கத்தார் ஏர்வேஸ்.

3. லண்டன் - பெர்த், பயண தூரம்:14,500. நிறுவனம்: குவாண்டாஸ்
ஏர்வேஸ்

4. சிங்கப்பூர் - லாஸ் ஏஞ்சலிஸ், பயண தூரம்:14,114. நிறுவனம்: யுனைட்டட் ஏர்வேஸ்

5. சிட்னி - டல்லஸ், பயண தூரம்:13,850. நிறுவனம்: குவாண்டாஸ் ஏர்வேஸ்

6. சிங்கப்பூர் - சான் ஃபிரான்சிஸ்கோ, பயண தூரம்: 13,593, நிறுவனம்: யுனைட்டட் ஏர்வேஸ் / சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

(பயண தூரம்: கிலோமீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது)  

Top