Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லோர்னி (Lornie) விரைவுச் சாலையின் வடக்குப் பகுதி திறப்பு

லோர்னி (Lornie) விரைவுச் சாலையின் வடக்குப் பகுதி கடந்த வாரம் 19ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

வாசிப்புநேரம் -
லோர்னி (Lornie) விரைவுச் சாலையின் வடக்குப் பகுதி திறப்பு

படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

லோர்னி (Lornie) விரைவுச் சாலையின் வடக்குப் பகுதி கடந்த வாரம் 19ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

மெக்ரிட்சி மேம்பாலச் சாலைக்கு இட்டுச் செல்லும் லோர்னி விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி, ஆடம் (Adam) சுரங்கப்பாதை, சைம் (Sime) சுரங்கப்பாதை ஆகியவை சென்ற வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஆடம் சுரங்கப்பாதை, துவாஸிலிருந்து சாங்கிக்கு இட்டுச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்.

வருங்காலத்தில் அங்குப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புதிய வசதிகள் போக்குவரத்தை மேம்படுத்த உதவும். மேல் விவரங்களுக்கு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தை நாடலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்