Images
  • Lornie highway (1)
    (படம்: LTA)

லோர்னி நெடுஞ்சாலை - தெற்கு நோக்கிச் செல்லும் பகுதியின் கட்டுமானம் நிறைவு

லோர்னி நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பகுதியில் கட்டுமான வேலைகள் நிறைவுபெற்று விட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

அந்தப் புதிய நெடுஞ்சாலை இம்மாதம் 28ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும்.


தாம்சன் ரோடு, லோர்னி ரோடு ஆகியவற்றை தீவு விரைவுச்சாலை, ஆடம் ரோடு, ஃபேரர் ரோடு ஆகியவற்றுடன் இணைக்க அதன் தெற்கு நோக்கிய பகுதி உதவும்.


ஆண்ட்ரூ ரோட்டுக்கு அருகே வாகனங்களுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையைத் தவிர்த்து விட்டு லோர்னி ரோட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்ல வாகனமோட்டிகளுக்கு அது உதவும்.

 

Top