Images
  • lorry

லாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை

லாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய 67 வயது ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனையும் ஈராண்டுகள் வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

கவனக்குறைவாக நடந்துகொண்டு நால்வரைக் கடுமையாகக் காயப்படுத்தியதுடன் 19 பேருக்குக் காயம் விளைவித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் ஓட்டுநர் லூ டெக் சூன் (Loo Teck Choon)

ஜூரோங் ஐலண்ட் நெடுஞ்சாலை வழியாக லாரியை ஓட்டிச்சென்ற அவர் தடம் மாறும்போது சரியாகக் கவனிக்காததால் முன்னால் சென்ற பேருந்தின்மீது மோதினார்.

விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த ஓர் ஆடவரும் காயமடைந்தனர்.

சாலை தடம் மாறும்போது முன்னால் பேருந்து இருந்தும் அவர் வாகனத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கவனக்குறைவால் கடுமையான காயம் விளைவித்ததற்கு அதிகபட்சமாக ஈராண்டுச் சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

Top