Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காதல் மோசடிக்குப் பலியாகி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட மக்கள் கழக முன்னாள் ஊழியருக்குச் சிறை

சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட மக்கள் கழகத்தின் முன்னாள் தொகுதி மேலாளருக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காதல் மோசடிக்குப் பலியாகி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட மக்கள் கழக முன்னாள் ஊழியருக்குச் சிறை

கோப்புப் படம்: Hanidah Amin

சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட மக்கள் கழகத்தின் முன்னாள் தொகுதி மேலாளருக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காதல் மோசடிகளால் ஏமாற்றப்பட்ட எங் கூன் லே என்ற அந்த 64 வயது மாது, வெளிநாட்டவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறந்து, சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு மொத்தம் 430,000 வெள்ளி.

சம்பவங்கள் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடந்தன.

2015-ஆம் ஆண்டில் கிரெக் ஜான்சன் (Greg L Johnson) என்ற அடையாளம் தெரியாத ஆடவருடன் எங், Facebook மூலம் தொடர்பு வைத்திருந்தார்.

பணப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர், கிரெக்கிடம் கடன் கேட்டார்.

 கடனைப் பெறுவதற்கு, எங்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்படும் என்றும் அதில் ஒரு பங்கை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றவேண்டும், என்றும் கூறப்பட்டது.

எங்-கும் அவ்வாறு செய்தார்.

இருப்பினும், எங்கிற்கு மாற்றப்பட்ட தொகை மின்னஞ்சல் மோசடியில் ஏமாற்றப்பட்டவர் அனுப்பிய பணம் என்று வர்த்தக விவகாரப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனைகளுக்குக் கணக்கை இனி பயன்படுத்தக்கூடாது என்று எங், 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எச்சரிக்கப்பட்டார்.

கிரெக்கைத் தொடர்புக்கொள்ளப் பயன்படுத்திய Facebook கணக்கை எங், வர்த்தக விவகாரப் பிரிவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், அவர் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், இன்னொரு Facebook கணக்கின் வழியாக, சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

எங், 2017-ஆம் ஆண்டு, அடையாளம் தெரியாத இன்னொரு ஆடவருடன் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்