Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையக் காதல் மோசடி - 4 இளையர்களிடம் விசாரணை

இணையக் காதல் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 4 இளையர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. 

வாசிப்புநேரம் -

இணையக் காதல் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 4 இளையர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

அவர்கள் 15 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஜோடிகள் சந்திப்பதற்கான இணையத்தளம் ஒன்றில், அடையாளம் தெரியாத இருவருடன் நட்புக் கொண்டதாக, பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகாரளித்தார்.

சாலை விபத்தால் ஏற்பட்ட பழுதுபார்ப்புச் செலவுகளுக்காகப் பணத்தை மாற்றிவிடும்படி பல முறை அவர்கள் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதற்குப் பரிமாற்றமாக, தன்னிடம் நட்பாக இருக்க அந்த இருவரும் முன்வந்ததாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

இருவரும் சுமார் 12,200 வெள்ளியை மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.

அதைப் பற்றி பாதிக்கப்பட்டவர் இம்மாதம் 15ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகார் செய்தார்.

அதன் தொடர்பில், பிடோக் காவல்துறைப் பிரிவு நடத்திய விசாரணைகளின் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனயும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்