Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும்போது காதலனைக் காணச் சென்ற பெண் மீது குற்றச்சாட்டு

அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும்போது காதலனைக் காணச் சென்ற பெண் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும்போது, பெண் ஒருவர் அவரது காதலனை இரு முறை காணச் சென்ற சந்தேகத்தின்பேரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ரேணுகா ஆறுமுகம் என்ற அந்தப் பெண் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதில் ஒரு குற்றம், முகக்கவசத்தைச் சரியாக அணியாமல் இருந்தது தொடர்பானது.

நீதிமன்ற ஆவணத்தில் பெண் எப்படிப் பிடிபட்டார் என்னும் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

ரேணுகா, ஏப்ரல் 29அம் தேதி அவரது நண்பரைக் காணவும், ஒரு முறை வெளியே சென்றுள்ளார்.

ஏப்ரல் 12, 17 ஆகிய தேதிகளில் மாது அவரது காதலனைச் சந்தித்துள்ளார்.

17ஆம் தேதியன்று அவர், கிளமெண்டியிலுள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் முகக்கவசத்தை சரியாக அணிந்திருக்கவில்லை.

தாம் செய்தது தவறு என்பதை உணர்வதாகவும், தாம் இப்போது வேலையில் இல்லை என்றும்
ரேணுகா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அபராதமாகப் பெருந்தொகை விதிக்கப்பட்டால் தம்மால் அதைக் கட்ட முடியாது என்றும் அவர் நீதிபதியிடம் முறையிட்டார்.

அதிரடித் திட்ட விதிமுறைகளை மீறிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ, 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்