Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'முதலாளிகள் மூத்த ஊழியர்களை வேலைத் திட்டக் கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள வேண்டும்'

முதலாளிகள் 45 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த ஊழியர்களை வேலைத் திட்டக் கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும் என்று மனிதவள அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'முதலாளிகள் மூத்த ஊழியர்களை வேலைத் திட்டக் கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள வேண்டும்'

(படம்: Centre for Seniors)

முதலாளிகள் 45 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த ஊழியர்களை வேலைத் திட்டக் கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும் என்று மனிதவள அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் கூறியுள்ளார்.

வேலை தொடர்பான கலந்துரையாடல்களும் திட்டங்களும் முதலாளிகளுக்குப் பயளளிக்கும்.

அதேநேரம் மூத்த ஊழியர்கள் தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக்கொள்ள அது உதவியாக இருக்கும் என்றார் திருமதி லோ.

வேலை மாறுவோரும் மறுவேலை வாய்ப்பைத் தேடுவோரும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லவும் அவை உதவக்கூடும் என்றார் அவர்.

நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கின்போது திருமதி லோ அந்தத் தகவல்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

மூத்த ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களுக்கேற்பச் செயல்பட அந்த ஏற்பாடு உதவும் என்றார் அவர்.

வேலை, மறு-வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடும்பம் ஆகிய விவகாரங்கள் குறித்து உரையாடுவதற்கு அத்தகைய பொருத்தமான பயிலரங்குகள் உதவுகின்றன.

Centre for Seniors எனும் சமூகச் சேவை அமைப்பு பயிலரங்கை வழிநடத்துகிறது.

2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் பயிற்சிவகுப்பின் மூலம் இதுவரை சுமார் மூவாயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்