Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித் திட்டம் தொடங்கியபிறகு தீவிர சிகிச்சைப் பிரிவு COVID-19 நோயாளிகள் நேற்று ஆகக் குறைவு

சிங்கப்பூரில் நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் தொடங்கியதிலிருந்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை  நேற்று ஆகக் குறைவாகப் பதிவானது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் தொடங்கியதிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று ஆகக் குறைவாகப் பதிவானது

நேற்றைய (மே 22) நிலவரப்படி 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த மாதம் 7ஆம் தேதி அதிரடித் திட்டம் தொடங்கியதிலிருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஓரிலக்க எண்ணிக்கையில் பதிவானது அது முதல்முறை.

கடந்த மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களின் எண்ணிக்கை 20க்கும் 30க்கும் இடைப்பட்டிருந்தது.

சமுக அளவில் கிருமித்தொற்று எண்ணிக்கை இவ்வாரம் சற்று உயர்ந்துள்ளதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சராசரியாக ஒருநாளில் ஐவர் நோய்வாய்ப்பட்டனர். அது இவ்வாரம் ஏழுக்கு அதிகரித்துள்ளது.

பாலர்பள்ளி ஊழியர்களிடத்திலும் தாதிமை இல்லங்களிலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் அந்த உயர்வுக்குக் காரணம் என்று அமைச்சு தெரிவித்தது.

இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது ஐந்து பாலர்பள்ளி ஊழியர்களுக்கும் தாதிமை இல்லத்தினர் நால்வருக்கும் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்