Images
  • marina
    ( படம்: AFP )

வேலைக்குச் செல்ல 45 நிமிடப் பயணம்,குடியிருப்புப் பேட்டைகளில் ஆங்காங்கு செல்ல 20 நிமிடம்: 2040 நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம்

வேலைக்குச் செல்ல 45 நிமிடப் பயணம்,குடியிருப்புப் பேட்டைகளில் ஆங்காங்கு செல்ல 20 நிமிடம்.

அவை 2040க்கான நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட இலக்குகளில் சில.

நிலப் போக்குவரத்து ஆணையம் சென்ற ஆண்டு பொதுமக்கள் கருத்தறியும் நடவடிக்கையைத் தொடங்கியது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல், அனைத்து விதமான பயணிகளையும் உள்ளடக்கிய முறையைக் கொண்டிருத்தல், பொதுப் போக்குவரத்தின் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் ஆணையம் கருத்துத் திரட்டியது.

Walk-Cycle-Ride எனும் இலக்கைக் கொண்டதாகப் பொதுப் போக்குவரத்து முறையை மாற்றுவதும் பெருந்திட்டத்தின் நோக்கம்.

பேருந்துகள், ரயில்கள், தனியார் கார்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவை அதில் அடங்கும்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கும்போது அந்தத் துறையில் அதிக வேலைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுப் போக்குவரத்துப் பெருந்திட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான மெல்வின் யோங் கூறினார்.

ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களும் துறைசார்ந்தவர்களும் எதிர்கால நிலப் போக்குவரத்து முறையின் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2040க்கான நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் ஆலோசனைக் குழு அதன் பரிந்துரைகளை அடுத்த மாத மத்தியில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.

Top