Images

தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் திரு. ஆண்டியப்பன்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் 2019 விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர்களாக இருவர் சிறப்பிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் 72 வயது திரு. நா. ஆண்டியப்பன்.

வாழ்க்கை முழுவதும் தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணித்த அவர், மலேசியாவில் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.

பின்னர், சிங்கப்பூர் ஒளிபரப்புத் துறையில் 35 ஆண்டுகள் சேவை புரிந்தார் திரு. நா. ஆண்டியப்பன்.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் தற்போது மதியுரைஞராகவும் பதவி விகிக்கும் அவர், தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

Top