Images
  • PMD
    (படம்: TODAY)

மின் ஸ்கூட்டர் புகார்களுக்காக நிலப் போக்குவரத்து ஆணைய செயலியில் புதிய அம்சம்


மின் ஸ்கூட்டர் பற்றிய புகார்களை அளிப்பதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் தனது திறன்பேசிச் செயலியில் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.

MyTransport.SG செயலியில் இம்மாத இறுதிக்குள் அந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டின் முற்பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 1,700 சம்பவங்கள் அதிகாரிகள் கண்ணில் பட்டன.

அவற்றில் பாதிச் சம்பவங்கள், தவறான பாதையில் செலுத்தியது அல்லது வேகக்கட்டுப்பாட்டை மீறியது, கவனக்குறைவாகச் செலுத்தியது தொடர்பானவை.

மேலும் 30 விழுக்காட்டுச் சம்பவங்களில் மின் ஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்பட்டதை விடப் பெரிய அளவு, அதிக எடை, அல்லது அதிக வேகத்தைக் கொண்டிருந்தன.

MyTransport.SG செயலியில் பொதுமக்கள் தவறிழைக்கும் ஓட்டுநர்கள் தொடர்பான படங்கள் அல்லது காணொளிகளை அனுப்பலாம்.

அத்தகைய ஓட்டுநர்களைக் கண்டறிந்து நிலைமையைக் கையாள அது உதவும்.

வேக வரம்பை மீறுதல் போன்ற குற்றச்செயல்களைப் புரிவோரை அடையாளங்காண கண்காணிப்புக் கேமராக்கள், காணொளிப் பகுப்பாய்வு போன்றவை உதவுமா என்றும நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயவிருக்கிறது.


Top