Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனியார் வாடகைக் கார்களைச் செலுத்துவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பது கட்டாயம்

சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்களுக்கும், தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் கூடுதல் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
தனியார் வாடகைக் கார்களைச் செலுத்துவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பது கட்டாயம்

கோப்புப்படம்

சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்களுக்கும், தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் கூடுதல் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துறைக்கான COVID-19 நிவாரணத் திட்டத்தை நீட்டிக்கும் வகையில், அதன்கீழ் கூடுதலாக 112 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 

மேலும், இந்த மாதத்தோடு முடிவடையவிருந்த நிவாரண நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

தனியார் வாடகைக் கார்களைச் செலுத்துவதற்கான ஓட்டுநர் உரிமத்துக்கான விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

புதிய விதிமுறையின்கீழ் உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் குறைந்தது 30 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பது கட்டாயம்.

இன்று முதல் அந்த விதிமுறை நடப்புக்கு வந்துள்ளது.

COVID-19க்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது டாக்சிப் பயணங்கள் 70 விழுக்காடு சரிந்துள்ளன.

வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் வர இயலாததாலும், அதிகமானோர் வீட்டில் இருந்தவாறே வேலை செய்வதாலும் அந்த நெருக்கடி நிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் வண்ணம், அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்கு மாதந்தோறும் 300 வெள்ளி வழங்கிவரும்.

டாக்சி நிறுவனங்கள், தொடர்ந்து வாடகைக் கழிவையும் வழங்கும்.

இந்நிலையில் டாக்சி ஓட்டுநர்களும், நிறுவனங்களும் மேலும் 3 மாதங்களுக்கு உரிமக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார்.

Point-to-Point விநியோகச் சேவை முன்னோடித் திட்டமும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்