Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லக்கி பிளாஸா வாகன விபத்து - ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை

லக்கி பிளாஸா (Lucky Plaza) கடைத்தொகுதிக்கு அருகே ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

லக்கி பிளாஸா (Lucky Plaza) கடைத்தொகுதிக்கு அருகே ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

அந்த விபத்தில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் இருவர் மாண்டனர்.

நால்வர் காயமுற்றனர்.

6 பேரும் பிலிப்பீன்ஸைச் சேர்ந்தவர்கள்.

மலேசியாவைச் சேர்ந்த 66 வயது சோங் கிம் ஹோவின் (Chong Kim Hoe) வாகனம் ஓட்டும் உரிமம், அவர் சிறையிலிருந்து வெளியாகிய பின், 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

காரைத் திருப்பும்போது, தவறாகக் காரின் வேக அதிகரிப்புக் கருவியை (accelerator) சோங் அழுத்தியதால், விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது.

விபத்தால் ஏற்பட்ட விளைவு கடுமையானது என நீதிபதி சுட்டினார்.

சாலைப் பயனீட்டாளர்கள் மீது உள்ள பொறுப்பை அந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக அவர் சொன்னார்.

மோட்டார் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த வேளையில் மரணம் விளைவித்த குற்றத்திற்கு, சோங்கிற்கு 8 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

-CNA/az(gr) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்