Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டிரம்ப்-கிம் சந்திப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உணவுகள்

டிரம்ப்-கிம் சந்திப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உணவுகள்

வாசிப்புநேரம் -

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு முடிவடைந்துள்ளபோதும் அதன்தொடர்பில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மக்கள் இன்னமும் விரும்பி வாங்குகின்றனர்.

பிரபலமடைந்துள்ள உணவுவகைகளைக் கூடுதல் காலத்துக்கு விற்கப்போவதாக உணவகங்கள் கூறியுள்ளன.

கோழி, கிம்ச்சி பர்கர். அதனுடன் கொரியச் சோற்று உருண்டைகளும் உருளைக்கிழங்குப் பொரியலும் பரிமாறப்படுகின்றன.

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பையொட்டிச் சிறப்பாக உருவாக்கப்பட்ட உணவு வகைகளில் இதுவும் ஒன்று.

சந்திப்பு முடிவடைந்திருக்கலாம்..

ஆனால் இந்த உணவை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து விரும்பி வாங்குவதாகக் கூறப்படுகிறது.

ரோயல் பிளாஸா ஆன் ஸ்கோட்ஸில் அமைந்துள் கரோசல் உணவகம் தனது கோழி, கிம்ச்சி பர்கரை மேலும் 2 வாரங்களுக்கு விற்க எண்ணியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தருணத்தை
சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து கொண்டாட இது ஒரு வழி என்கிறது உணவகம்.

உச்சநிலைச் சந்திப்பு வெற்றிகரமானதாக அமைந்ததால் பர்கர் விற்பனையை இம்மாத இறுதிவரை உணவகம் நீட்டித்துள்ளது.

டிரம்ப்-கிம் சந்திப்பைக் குறிக்கும் வகையில் சிறிய அளவு பர்கர்களை உணவகம் நேற்று இலவசமாக விநியோகித்தது.

ஒரு மணிநேரத்துக்குள் அவை முடிந்துவிட்டன.

உச்சநிலைச் சந்திப்புக்காக சிங்கப்பூருக்கு வந்திருந்த அனைத்துலகச் செய்தியாளர்கள், வித்தியாசமான ஐஸ்கிரீம் சுவையை ருசித்து மகிழ்ந்தனர்.

அனைத்துலக ஊடக நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவுக் கூடத்தில் கிம்ச்சி ஐஸ் கிரீம் வழங்கப்பட்டது.

உள்ளூர் ஐஸ் கிரீம் நிறுவனமான Udders அதனை விநியோகித்தது.

கிம்ச்சி ஐஸ் கிரீமை இவ்வாண்டின் பிற்பகுதியில் குறிப்பிட்ட சில உணவகங்களில் விற்க நிறுவனம் திட்டமிடுகிறது.


Hopheads எனும் உள்ளூர் மதுபானக்கூடம், டிரம்ப்-கிம் சந்திப்பை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பானங்கள் அமோக வரவேற்பைப் பெற்றதாகக் கூறியது.

6 நாட்களில் 200 பானங்களை அது விற்றது.

"Bromance" என்று பெயரிடப்பட்ட அந்தப் பானத்தை நிரந்தரமாக விற்கப்போவதாகவும் நிறுவனம் சொன்னது.

அமெரிக்க அதிபரும் வடகொரியத் தலைவரும் நாடு திரும்பியிருக்கலாம்.

இருவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் தாக்கம் இன்னும் சில காலம் இங்கிருக்கும் என்றே சொல்லலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்