Images
  • pm lee
     (படம்: AP/Thibault Camus)

சிங்கப்பூர்-பிரான்ஸ் கடப்பாடுகள் மறு உறுதி

பிரதமர் லீ சியென் லூங்கும், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் (Emmanuel Macron) தடையற்ற, வெளிப்படையான, அனைத்துலக வர்த்தகக் கட்டமைப்பின் தொடர்பில் தங்களது கடப்பாட்டை மறு உறுதிப்படுத்தியுள்ளனர்.

பன்முகத்தன்மை, உலகமயமாதல், சட்ட விதிமுறைகள், நீடித்த மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பிலும், இருநாடுகளும் கடப்பாடு கொண்டிருக்க அவர்கள் உறுதியளித்தனர்.

இரு தலைவர்களும் நடத்திய கலந்துரையாடலில், புத்தாக்க-வளர்ச்சி, தொழில்நுட்ப இடையூறுகளைச் சமாளிப்பது, அறிவார்ந்த நகரங்களை உருவாக்குவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அறிக்கை அதனைத் தெரிவித்தது.

வட்டார, அனைத்துலக நடப்புகள் குறித்தும், உலகமயமாதலும், தடையற்ற வர்த்தகமும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறித்தும் திரு. லீயும், திரு. மேக்ரோனும் கலந்துபேசினர்.

வருங்காலத்தில், ஷங்ரிலா (Shangri-La) கலந்துரையாடலில் முக்கிய உரையாற்றும்படிப் பிரதமர் லீ விடுத்த அழைப்பை அதிபர் மேக்ரோன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெறும் அந்நாட்டு தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

Top